1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 ஜூன் 2017 (18:46 IST)

ரசிகர்களை மீண்டும் சந்திக்கும் ரஜினி - அரசியல் அறிவிப்பு வெளியாகுமா?

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
கடந்த மாதம் 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “இங்கே சிஸ்டம் சரியில்லை. நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக  இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 
 
அதன்பின் அவர் கடந்த 28ம் தேதி காலா படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றார். தொடர்ந்து 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் தற்போது மீண்டும் சென்னை திரும்புகிறார். சென்னையில் ஏற்கனவே மும்பை தாராவி பகுதி போல் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்து  கொள்கிறார்.
 
அதன் பின், இந்த மாதம் நடுவில் அல்லது 3வது வாரத்தில் ரஜினி மீண்டும் தந்து ரசிகர்களை சந்திப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே 15 மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது விடுபட்ட ரசிகர்களுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொள்ள இருக்கிறார் எனத் தெரிகிறது.
 
மேலும், இந்த சந்திப்பின் போது ரஜினி தனது அரசியல் பிரவேசம் பற்றி முக்கிய அறிவிப்பை கூறுவார் என அவரின் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.