செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 14 ஜூன் 2017 (08:56 IST)

ஸ்டாலினுக்கு எதிராக வியூகம் வகுக்கும் ரஜினி: தீவிர அரசியலில் விரைவில்!

ஸ்டாலினுக்கு எதிராக வியூகம் வகுக்கும் ரஜினி: தீவிர அரசியலில் விரைவில்!

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வர இருப்பதாகவும், அவர் முன்பைவிட தற்போது மிகவும் வேகமாக தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அவரது போட்டியாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தான் இருப்பார் என ரஜினிகாந்த் தன்னை பார்க்க வருபவர்களிடம் கூறிவதாக தகவல்கள் வருகின்றன.
 
ரசிகர்களை சந்தித்த ரஜினிகாந்த் முதற்கட்டமாக சில அரசியல் தலைவர்களையும், பிரமுகர்களையும் சந்தித்தார். இந்நிலையில் ரகசியமாக சத்தமில்லாமல் தனது இரண்டாம் கட்ட சந்திப்பையும் ரஜினி நடத்தி வருகிறாராம். ரஜினிகாந்த் தன்னை சந்திக்க வரும் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்களிடமும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பற்றி பேசுகிறாராம்.
 
தான் அரசியலுக்கு வந்தால் தனது பிரதான போட்டியாளராக ஸ்டாலின் தான் இருப்பார் என ரஜினி நினைக்கிறார். இதற்காக ரஜினி ஸ்டாலின் பற்றி ஒரு திறனாய்வே நடத்தியுள்ளாராம். அதன் அடிப்படையில் ஸ்டாலினிடம் உள்ள குறைகளை தன்னை சந்திக்க வருபவர்களிடம் வெளிப்படையகவே ரஜினி கூறுகிறாராம்.