1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 16 மே 2017 (16:07 IST)

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த ரஜினி தான் காரணமாம்?

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்த ரஜினி தான் காரணமாம்?

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரது வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் சிதம்பரத்துக்கு மற்றும் அவரது நண்பர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் 9 பேர் கொண்ட சிபிஐ குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.


 
 
இந்த சோதனை குறித்து விளக்கம் அளிக்க சிபிஐ தரப்பு மறுத்துவிட்டது. ஆனால் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிதம்பரம் தரப்பு கூறி வருகிறது. இந்நிலையில் இந்த சிபிஐ சோதனை ரஜினியை மிரட்டுவதற்கானது என காங்கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
 
இது குறித்து பேசிய அவர், ரஜினியை மிரட்டவே ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் தனிக்கட்சித் தொடங்கக் கூடாது. அவர் பாஜகவில் தான் இணைய வேண்டும் என்பதற்காக அவரை மிரட்டவே இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார் கராத்தே தியாகராஜன்.
 
அப்போ ரஜினி தான் காரணமா பா.சிதம்பரம் வீட்டில் சோதனை நடக்க எனவும், ரஜினி நேற்று அரசியல் குறித்து பேசவில்லை என்றால், இன்று சிதம்பரம் வீட்டில் இந்த சோதனை நடந்திருக்காதா என கேள்வி எழுகிறது.