புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 நவம்பர் 2018 (11:32 IST)

ரஜினி, கமல் அரசியலுக்கு வரனும்னா கடுமையா உழைக்கனும்: லேடி சூப்பர் ஸ்டார் பரபரப்பு பேச்சு

ரஜினி, கமல் ஆகியோர் மக்களுக்காக கடுமையாக உழைத்தால் தான் அவர்களிடையே நன்மதிப்பை பெற்று அரசியலில் வெற்றி பெற முடியும் என நடிகை விஜயசாந்தி கூறியுள்ளார்.
ரஜினி, கமல் ஆகியோர் அடுத்தடுத்து தங்களின் அரசியல் வருகையை தெரிவித்தனர். ரஜினி இன்னும் கட்சி பெயரை அறிவிக்காமல் விரைவில் கட்சிப் பெயரையும் கொள்கையையும் அறிவிக்கிறேன் என கூறியிருக்கிறார். இது ஒருபுறம் இருக்க கமல்ஹாசன், அரசியலில் நுழைந்து மக்கள் நீதிமய்யம் என்ற கட்சியை உருவாக்கி களத்தில் மக்களை சந்தித்து வருகிறார்.
 
இந்நிலையில் கமல் ரஜினியின் அரசியல் வருகை குறித்து பேசிய தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை விஜயசாந்தி, நான் அரசியலில் நுழைந்து 20 வருடங்கள் ஆகிறது. மக்களுக்காக கடுமையாக உழைத்ததால் தான் நான் தெலிங்கானா அரசியலில் வெற்றி பெற முடிந்தது. அதுபோல கமல், ரஜினி ஆகியோர் மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களுக்கு உதவ வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற முடியும் என கூறினார்.