வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 2 ஜூன் 2019 (15:53 IST)

நாங்களே கவலைப்படவில்லை, கமலுக்கு ஏன் இந்த கவலை? ராஜேந்திர பாலாஜி!

மத்திய அமைச்சரவையில் தமிழக எம்பிக்கள் ஒருவர் கூட இடம்பெறாதது குறித்த கேள்வி ஒன்றுக்கு சமீபத்தில் பதிலளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு வாய்ப்பே இல்லை என்பதைத்தான் பார்க்க முடிகிறது. வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்பதாக தெரியவில்லை' என்று கூறியிருந்தார்
 
கமல்ஹாசனின் இந்த கருத்து குறித்து சாத்தூரில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்த தமிழக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, 'மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து அதிமுகவே கவலைப்படாத போது, கமலுக்கு ஏன் இந்த கவலை' என்று தெரிவித்தார்.
 
மேலும் மக்கள் ஏற்றுக் கொள்ளாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாது என்றும் நேரு கொண்டுவந்த இருமொழிக்கொள்கையில்தான் அதிமுகவுக்கு உடன்பாடு என்றும், மும்மொழிக் கொள்கையை கொண்டுவந்தால் அதை தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்தார்.