திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (16:04 IST)

ராஜமெளலி- சூப்பர்ஸ்டார் இணையும் ரூ. 600 கோடி பட்ஜெட் படம் !

makesh babu
சமீபத்தில்  ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர்.  ராம்சரண் , ஆலியாபட் உள்ளிட்ட பல நட்சத்திரப் பட்டாளங்களின் நடிப்பில் வெளியான படம் ஆர்.ஆர்.ஆர்.
 

இப்படம் பாகுபலி பட வசூல் சாதனையை முறியடித்து ரூ.1000 கோடிக்கு மேல் வசூலீட்டி சூப்பட் ஹிட் அடித்துள்ளது.

இப்படத்தை அடுத்து,  நடிகர் மகேஷ்பாபுவை வைத்து ஒரு பிரமாண்ட படத்தை  இயக்கி வருகிறார் ராஜமெளலி.  இப்படம் ஆப்பிரிக்காவிலுள்ள மிகப்பெரிய காடுகளில் பிரமாண்டமான செட் போடப்படும் படப்பிடிப்பு நடக்க உள்ளதாகத்தகவல் வெளியானது.

இந்த நிலையில், இப்படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மகேஷ்பாபு – திரிவிக்ரம் கூட்ட்ணியில் உருவாகி வரும் #SSMB28  படத்தின் ஷூட்டிங் முடிந்த பின், இந்த ஆண்டு இறுதியில், இப்படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனவும், இப்படம் அடுத்தாண்டு கோடை  காலத்தில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகிறது.

மேலும், இப்படம் #SSMB29   600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராக உள்ளதாகவும், பாகுபலி, ஆர்,ஆர்.ஆர் படங்களைத் தொடர்ந்து இப்பட்த்திற்கும் கீரவாணி இசையமைக்கவுள்ளதாகவும், இது PANWORLD  படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.