தொடர்புடைய செய்திகள்
- பார்முலா 4 கார் பந்தயம்: 3 நாட்கள் சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. முழு விவரங்கள்..!
- ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- 'கோட்' படத்திற்கு கூடுதல் கட்டணம்.. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு..!
- நடிகர்விமல் படத்தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித்தர சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு....
- சென்னை கார் பந்தயத்திற்கு தடை கோரிய வழக்கு.! போக்குவரத்து ஆணையருக்கு பறந்த உத்தரவு..!!
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவு? எதிர்காலத்தில் ஏறுமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை சென்னையில் நேற்றைய விலையில் தான் விற்பனையாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
தங்கம் மட்டுமின்றி வெள்ளியின் விலையிலும் இன்று எந்த மாற்றமும் இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை குறித்த விவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 6,715 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 53,720 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.54,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 7,170 எனவும் ஒரு சவரன் ரூபாய் 57,360 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 93.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 93,500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
