குளிரவைத்த கோடை மழை: திண்டுக்கல் பகுதியில் பரவலாக பெய்தது


Suresh| Last Updated: ஞாயிறு, 10 ஏப்ரல் 2016 (09:07 IST)
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் திண்டுக்கல் பகுதியில் மழை பெய்து குளிரவைத்துள்ளது.

 

 
திண்டுக்கல்லில் சனிக்கிழமை காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேகமூட்டமாக இருந்தத.
 
இதனால், வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட வெகுவாக குறைந்தது. இதைத் தொடர்ந்து, பிற்பகலில் சிறுமலை, கொடைரோடு, சின்னாளப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
 
சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த இந்த பலத்த மழையால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :