திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 பிப்ரவரி 2023 (09:00 IST)

7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! – சென்னை வானிலை ஆய்வு மையம்!

தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்றும் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் வங்க கடலில் ஏற்பட்ட புயல் இலங்கையில் கரையை கடந்த நிலையில் தமிழக மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்டா பாசன பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது.

இன்று அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தென்காசி, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை வரை மழைப்பொழிவு தொடரும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.

Edit by prasanth.K