வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 6 டிசம்பர் 2015 (14:55 IST)

தமிழகத்தில் கனமழைக்கு பலியான 7 பேர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய்: ஜெயலலிதா அறிவிப்பு

கனமழையின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உயரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

 
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தென் மேற்கு வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பெய்த கன மழையினால் சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் பிரேம்குமார்; நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் மணிகண்டன்; ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் பாண்டியன்; எழும்பூர் பகுதியைச் சேர்ந்த காமேஷ் என்பவரின் மகள் ஹிரக்கா; நடுவாங்கரை பகுதியைச் சேர்ந்த துளசிங்கம் என்பவரின் மகன் ரகுராம்; விருதுநகர் மாவட்டம், தென்கரை கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மனைவி கிருஷ்ணம்மாள்; ஆகியோர் கன மழையின் காரணமாக வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
 
திருநெல்வேலி மாவட்டம், காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மனைவி மாரியம்மாள் மழையின் காரணமாக மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.
 
தமிழ்நாட்டில் தற்போது பெய்து வரும் கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் மேற்கண்ட தேதிகளில் உயிரிழந்த இந்த 7 நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.