1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 23 ஆகஸ்ட் 2023 (12:18 IST)

திருநின்றவூரில் ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ரயில்கள் நிறுத்தம்..!

Train Track
சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் ரயில் தண்டவாளத்தில் விரிசல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.  
 
சென்னை திருநின்றவூர் மற்றும் நெமிலிச்சேரி ரயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தில் இன்று காலை விரிசல் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக ரயில்வே துறை அந்த வழியாக வந்து கொண்டிருக்கும் போடி - சென்னை ரயிலை நிறுத்த  தகவல் அளிக்கப்பட்டது 
 
மேலும் இதே வழியாக சென்னை வந்து கொண்டிருந்த ஆறு எக்ஸ்பிரஸ் ரயில்களும் நிறுத்தப்பட்டன. 
 
தற்போது விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சரி செய்யும் பணியை நடைபெற்று வருவதாகவும் தண்டவாளம் சரி செய்த பின்னர் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva