பள்ளி மாணவியை வேனில் ஏற்றி செல்பி எடுத்த ராகுல் காந்தி!

பள்ளி மாணவியை வேனில் ஏற்றி செல்பி எடுத்த ராகுல் காந்தி!
siva| Last Updated: திங்கள், 25 ஜனவரி 2021 (13:32 IST)
பள்ளி மாணவியை வேனில் ஏற்றி செல்பி எடுத்த ராகுல் காந்தி!
தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமின்றி தேசிய கட்சி தலைவர்களும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்கள்

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் காங்கிரஸ் ராகுல் காந்தி அவர்கள் இன்று மூன்றாவது நாளாக தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்

இன்று அவர் தேர்தல் பிரசார வாகனம் ஒன்றின் மீது ஏறி தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது தனக்கு கைகாட்டிய மாணவி ஒருவரை வாகனத்தின் மீது ஏற்றி அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த செல்பி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராகுல்காந்தி மதுரை வந்திருந்தபோது மாணவி ஒருவரின் அருகில் உட்கார்ந்து சாப்பிட்டார் என்பதும் அந்த புகைப்படமும் வைரல் ஆனது என்பதும் தெரிந்தது


இதில் மேலும் படிக்கவும் :