வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 20 டிசம்பர் 2016 (15:33 IST)

போன் செய்தால் மரக்கன்று உங்கள் வீடு தேடி வரும் - ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

தங்கள் வீட்டில் மரம் வளர்க்க விரும்புவோர், தங்களை தொடர்பு கொண்டால் மரக்கன்று உங்கள் வீடு தேடி வரும் என நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.


 

 
சமீபத்தில் சென்னை சந்தித்த வர்தா புயல் காரணமாக, பல ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. எனவே, அந்த இடங்களில் மீண்டும் மரங்களை நடுவதில் நடிகர் ராகவா லாரன்ஸ் அக்கறை காட்டி வருகிறார். 
 
அதன் எதிரொலியாக, சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகள் அல்லது தெருக்களில் நடுவதற்கு மரக்கன்றுகள் தேவைப்பட்டால் 9791500866, 9790750784, 9003037939 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார்.
 
அதன் மூலம், மரக்கன்றுகள் அவர்களின் வீடு தேடி வந்து இலவசமாக அளிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.