1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 7 மார்ச் 2017 (12:43 IST)

மாற்றுத்திறானாளிகளை இழிவுப்படுத்திய பேச்சு: ராதாரவி மன்னிப்பு கேட்க மறுப்பு

மாற்றுத்திறனாளிகளை எடுத்துக்காட்டாக கொண்டு அவர்களை கேலி செய்யும் விதத்தில் பேசியதற்கு ராதாரவி மன்னிப்பு கேட்க மறுப்பு தெரிவித்துள்ளார்.


 

 
அண்மையில் அதிமுக கட்சியில் இருந்து விலகி நடிகர் ராதாரவி திமுக கட்சியில் இணைந்தார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பேசிய ராதாரவி, ஸ்டாலினை எதிர்க்கும் அரசியல் தலைவர்களை மாற்றுத்திறனாளிகளோடு ஓப்பிட்டு பேசினார். அவரது பேச்சு மாற்றுத்திறனாளிகளை இழிவு படுத்தும் விதத்தில் இருந்ததால், மாற்றுத்திறனாளி சங்கத்தினர் ராதாரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரி போராட்டம் நடத்தினர்.
 
இதற்காக அவர் மீது காவல் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் ராதாரவி மன்னிப்பு கேட்க முடியாது என மீண்டும் எகத்தாளமாக பேசியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
 
நான் மாற்றுத்திறனாளிகளை கேலி செய்யவில்லை. நான் எதுவும் தவறாக பேசவில்லை. சென்சார் போர்ட்டில் இந்த வார்த்தைகள் பயன்படுத்த கூடாது என பட்டியல் உள்ளது. அதுபோல நீங்கள் எந்த எந்த வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாது என பட்டியலிட்டு சொல்லுங்கள். நாய் என்பதை நாய் என்றுதான் கூறமுடியும். நான் மன்னிப்பு கேட்கும் ஆள் இல்லை, என கூறியுள்ளார்.
 
இதன்மூலம் மீண்டும் அவர்களை இழிவுப்படுத்துவது போல் பேசியுள்ளார். அதோடு மன்னிப்பு கேட்க முடியாது என எகத்தாளமாக பேசியுள்ளார்.