செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 7 ஜனவரி 2020 (11:37 IST)

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம்: ஓபிஎஸ்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற ஏப்ரல் 12ம் தேதி இடைத் தேர்தல்  நடைபெறுகிறது. வருகிற ஏப்ரல் 12ம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறும்  எனவும்,  மார்ச் 27ம் தேதி மனுவை திரும்ப பெறும் நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இந்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 12-ந் தேதி  நடைபெறுகிறது. வாக்குகள் ஏப்ரல் 15-ந் தேதி எண்ணப்படுகின்றன. 
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர்-அம்மா-தீபா பேரவையின் பொதுச்செயலராக உள்ளார். அவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடபோவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுகவில் ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என பிரிந்துள்ள  நிலையில் இருவரும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளனர். அதிமுக வாக்குகள் சிதறி கிடக்கும் நிலையில் இத்தொகுதியில் வென்றாக வேண்டிய சூழ்நிலைக்கு இருக்கிறது. 
 
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி  இடைத்தேர்தலில் அதிமுக சின்னம் இரட்டை இலையில் போட்டியிடுவதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை  உள்ளது என்று கூறியுள்ளார்.