1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 டிசம்பர் 2023 (15:02 IST)

வங்கக்கடலில்‌ மிச்சாங்‌ புயல்‌.. அவசர எண்களை அறிவித்த புதுச்சேரி அரசு..!

வங்க கடலில் மிச்சாங்‌ புயல் தோன்றியுள்ளதை அடுத்து தமிழக அரசு பொதுமக்கள் உதவிக்காக அவசர கட்டணம் இல்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. மின்சார துறை சுகாதாரத்துறை காவல்துறை தீயணைப்பு துறை கடலோர காவல் படை என அனைத்து துறைகளுக்கும் தனித்தனியாக அவசர எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுவை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
 
வங்கக்கடலில்‌ உருவாகியுள்ள மிச்சாங்‌ புயல்‌ சின்னம்‌ காரணமாக புதுச்சேரியில்‌ தொடர்ந்து மழை பெய்து வருகிறது. புதுச்சேரியில்‌ புயல்‌ மற்றும்‌ கனமழையை சூறாவளியை எதிர்கொள்வதற்கு அனைத்து துறைகளும்‌ தயார்‌ நிலையில்‌ உள்ளன. மக்கள்‌ அவசர உதவிக்கு மாநில அவசரகால மையத்தில்‌ 24 மணிநேரமும்‌ இயங்கும்‌ 1070 மற்றும்‌ 1077 என்கிற கட்டணமில்ல தொலைபேசி எண்ணைத்‌ தொடர்புகொள்ளலாம்‌. இது தவிர, கீழ்காணும்‌ துறைகளில்‌ கட்டணமில்லா தொலைபேசியுடன்‌ இயங்கக்கூடிய கட்டுப்பாட்டு அறைகள்‌
திறக்கப்பட்டுள்ளன.
 
மின்துறை - 1912,
 
சுகாதாரத்துறை - 108, 104
 
காவல்துறை 2. 100, 112, 1931, 1073 1091
 
தீயணைப்புத்துறை 101
 
கடலோர காவல்‌ படை - 1554
 
பொதுமக்கள்‌ வதந்திகளை நம்ப வேண்டாம்‌ என்றும்‌ பாதுகாப்பு முகாம்களில்‌ தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள்‌ அதிகாரிகள்‌ கேட்டுக்கொள்ளாதவரை பாதுகாப்பு முகாம்களைவிட்டு வெளியே வரவேண்டாம்‌ என்றும்‌ கேட்டுக்கொள்கிறேன்‌.
மீனவர்கள்‌ கடலுக்கு செல்வதைத்‌ தவிர்க்க வேண்டும்‌ என்றும்‌, பொதுமக்கள்‌ கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களுக்குச்‌ செல்வதையும்‌, தவிர்க்க வேண்டும்‌
 
அமைச்சர்கள்‌, சட்டமன்ற உறுப்பினர்கள்‌ மற்றும்‌ தன்னார்வ அமைப்புகளைச்‌ சார்ந்தவர்கள்‌ அவரவர்‌ பகுதிகளில்‌ உள்ள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு உதவிட வேண்டும்‌ என்று கேட்டுக்கொள்கிறேன்‌.
 
அரசு மேற்கொள்ளும்‌ பேரிடர்‌ உதவி தொடர்பான நடவடிக்கைகளுக்கு மக்கள்‌ தங்களது ஒத்துழைப்பை நல்க வேண்டும்‌ என்று இத்தருணத்தில்‌ கேட்டுக்கொள்கின்றேன்‌
 
Edited by Siva