புதுச்சேரி சட்டமன்றக் கூட்டத்தின் தேதி: சபாநாயகர் செல்வம் அறிவிப்பு
தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் சமீபத்தில் கூடிய நிலையில் தற்போது புதுச்சேரி சட்டமன்றத்தின் கூட்டம் நடைபெறும் தேதியை சபாநாயகர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும் என்றும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் புதுச்சேரியை சட்டமன்றத்தின் சபாநாயகர் செல்வம் அறிவித்துள்ளார்
இந்த கூட்டத்தின்போது சமீபத்தில் சுயச்சை எம்எல்ஏக்கள் திடீரென ஆதரவை வாபஸ் பெற்றது குறித்து விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளதை அடுத்து இந்த கூட்டத்தில் ஒரு சில மசோதாக்களும் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது