செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (16:54 IST)

மகாத்மா காந்தியின் இரண்டு கட்டளைகளை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் !

மாகாத்மா காந்தி கூறிய இரண்டு கட்டளைகளை பாரத பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருகின்றார் ஒன்று இந்திய குடியுரிமை சட்டம் மற்றொன்று காங்கிரஸ் கட்சியினை கலைப்பது என்ற இரு கனவுகளை பா.ஜ.க ஆட்சி நிறைவேற்றி வருகின்றது – கரூரில் யங் இந்தியா சமூக அமைப்பின் தேசிய தலைவர் டி.எஸ்.பாண்டியராஜ் பேட்டியளித்தார். 

கரூரில் உள்ள தனியார் கல்லூரியின் சி.ஏ.ஏ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யங் இந்தியா சமூக அமைப்பின் தேசிய தலைவர் டி.எஸ்.பாண்டியராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது., இந்திய குடியுரிமை சட்டத்திற்கான ஒரு பொய்யான பரப்புரையை எதிர்த்து யங் இந்தியா ஆர்கினிசேஷன் என்கின்ற சமூக அமைப்பு பெயரில் தமிழகத்தில் உள்ள கல்லூரி மாணவர், மாணவிகளிடையே இந்திய குடியுரிமை சட்டத்திற்கான ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தி வருவதாக கூறிய, அந்த யங் இந்தியா ஆர்கினிஷேசன் அமைப்பின் தேசிய தலைவர் டி.எஸ்.பாண்டியராஜ்., அது சம்பந்தமாக ஒரு கூட்டமாக 2 ஆயிரம் மாணவிகள் படிக்க கூடிய கரூர் அன்னை மகளிர் கல்லூரியில் சி.ஏ.ஏ குறித்த ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியதாகவும், இந்திய குடியுரிமை சட்டம் என்றால் என்ன, தேசிய மக்கள் தொடர்பு கணக்கெடுப்பு என்றால் என்ன ? என்று தமிழகத்தில் இது குறித்து தெரியாத எதிர்கட்சிகளின் செயல்கள் குறித்தும் மாணவிகளிடம் எடுத்துரைத்தோம், மேலும், தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆதரவு ஊடகங்கள் இஸ்லாமியர் மக்களிடமும், சிறுபான்மையினர் மக்களிடமும் ஒரு அச்சத்தினை அந்த மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன.

ஒரு மத மோதலை உருவாக்கும் நிலையை மேற்கொண்டு வருகின்றனர். அதை தடுக்க வேண்டி, தமிழகத்தில் உள்ள மாணவர்களை நாங்கள் நேரிடையாக சென்று சந்திக்கின்றோம் என்றார். மேலும்., அந்த நிகழ்ச்சியில் ஒரு அரசியல் நிகழ்ச்சியாக இல்லாமல், ஏனென்றால் கல்லூரியில் அரசியல் பேசக்கூடாது என்கின்ற விதியின் படி, ஒரு விழிப்புணர்வினை தான் நாங்கள் ஏற்படுத்தி வருகின்றோம், எங்கள்  அமைப்பினுடைய நோக்கம், இந்திய குடியுரிமை சட்டம் என்பது இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டம் அல்ல, மேலும், இங்குள்ள இஸ்லாமியர்கள் இந்தியன் என்கின்ற உணர்வுள்ள ஒரு சட்டம்,

மேலும், இது இந்துக்களுக்கு ஆதரவான அவர்களுக்கு மட்டும் குடியுரிமை கொடுக்க கூடிய சட்டமும் கிடையாது., பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளாக இருக்கட்டும், இங்குள்ள தேசத்தில் கிறிஸ்துவர்கள் சிறுபான்மையினர்களாக இருந்திருந்தாலும், அவர்களும் இந்த தேசத்தில் குடிமகன்களாக ஆகும் தகுதி உண்டு, 2014 க்கு முன்னர் யாரெல்லாம் இந்தியாவில் வந்து குடியேறினார்களோ, அவர்களுக்கு வாழக்கூடிய தகுதி உண்டு, அவர்களுக்கு உண்மை நிலையினை தெரிந்து கொள்ள வேண்டுமென்பது தான் எங்கள் ஆசையையும் கூட, மேலும், இந்திய குடியரிமை சட்டம் மூலம் இஸ்லாமியர்கள் வெளியேற்றப் போகின்றார்கள் என்கின்ற ஒரு பொய்யான தகவலை மக்களிடம் சென்று சேர்த்து வருகின்றனர்.

ஆகவே இந்த பொய்யான தகவலை முறியடித்து உண்மை நிலையினை கல்லூரி மாணவ, மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்கின்ற நோக்கத்துடன் தான் இந்த அமைப்பு, 2014 ஆம் ஆண்டு வரை அகதிகளாக இருந்த இஸ்லாமியர்களாகவோ, இந்துக்களாகவோ, கிறிஸ்த்துவர்களாகவோ இருக்கட்டும் என்ன சலுகையினை மத்தியில் ஆண்ட அரசும், மாநிலத்தில் ஆண்ட திமுக ஆட்சி என்ன செய்தது, மன்மோகன் சிங் கூட இந்த சட்டத்தினை குறித்து அப்போது நாம் கொண்டு வரவேண்டுமென்று பேசி இருக்கின்றார். மகாத்மா காந்தி கூட, பேசும் போது, கிறிஸ்த்துவர்களோ, இஸ்லாமியர்களோ, நமது நாட்டிலிருந்து வெளியேறியவர்கள் வெளிநாட்டிலிருந்து விரட்டி அடிக்கும் போது அங்கிருந்து வருபவர்களை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றார். அதே போல, அவர்களுக்கு நாம் குடியுரிமை கொடுக்க வேண்டுமென்றார். அதை தான் பாரத பிரதமர் நரேந்திரமோடி நிறைவேற்றி வருகின்றார். காங்கிரஸ் என்கின்ற அமைப்பு ஒரு ஆபத்தான அமைப்பு ஆகையால் அதை கலைத்து விடுங்கள் என்றார். ஆனால் அதை நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா 85 சதவிகிதம் செய்து முடித்து விட்டுள்ளார்.

ஸ்டாலினும், ராகுல்காந்தியும் மத்தியிலும், மாநிலத்திலும் பாகிஸ்தானில் கூட வேண்டுமென்றால் ஆட்சி அமைக்கலாம், ஆனால், இந்தியாவில் முடியாது, அது கனவாக தான் செல்கின்றது., ஆகவே, தமிழகத்தில் அடுத்த ஆட்சி நாங்கள் தான் என்று தி.மு.க வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் இந்த இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசுகின்றனர். மத்தியில் கொண்டு வரும் நல்ல சட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல விடாமல், காங்கிரஸ் கட்சியும், மாநிலத்தில் தி.மு.க கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சியினரும் செய்து வருகின்றனர் என்றார்.