வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (17:03 IST)

களமிறங்கிய அதிமுகவினர் : ஜெயலலிதா குணமடைய அபிஷேகம், தொழுகை, பிரார்த்தனை

களமிறங்கிய அதிமுகவினர் : ஜெயலலிதா குணமடைய அபிஷேகம், தொழுகை, பிரார்த்தனை

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலமுடன் வாழ வீடு திரும்ப வேண்டி கரூரில் மாரியம்மன் கோயில்களில் அங்கப்பிரதட்சனை மற்றும் புனித தெரசா தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி எராளமான அதிமுகவினர் பிரார்த்தனை செய்தனர்.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 
 
இதனால், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், பூரண குணமடையவும், அவர்கள் விரைவில் வீடு திரும்பவதோடு, மக்களின் நலன் காக்கும் பணியில் என்றும் ஈடுபடுமாறு கரூர் மாவட்டத்தில் பல்வேறு கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் விஷேச அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு தொழுகைகளும், திருப்பலி நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது. 


 

 
இன்று 5வது நாளாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் கரூர் மாரியம்மன் கோயிலில் கரூர் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி சார்பில் அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, விஷேச அலங்காரங்கள் செய்யப்பட்டு பின்னர் அங்கப்பிரதட்சணம் செய்தனர் அதிமுகவினர். 
 
மேலும், கரூர் நகர அ.தி.மு.க சார்பில் கரூர் புனித தெரசாம்மாள் ஆலயத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சிறப்பு திருப்பலி எழுச்சி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க நிர்வாகிகளும், பொதுமக்களும், பெண்கள் என்று பல்வேறு தரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். 
 
கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கரூர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், கரூர் இளைஞரணி செயலாளர் சேரன் பழனிச்சாமி, மாவட்ட அவைத்தலைவர் காளியப்பன்,  கரூர் மாவட்ட மாண்வரணி தலைவர் வீரக்குமார், மாவட்ட பிரதிநிதி முனியப்பன் என் பிரபு, ஆயில் ரமேஷ், சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 
 
இந்த நிகழ்ச்சியை காட்டிலும் கரூர் நகர அ.தி.மு.க சார்பில் காலையிலும் மாலையிலும் பல்வேறு கோவில்களிலும், மசூதிகளிலும், சர்ச்சுகளில் பல்வேறு விஷேச பிரார்த்தனைகளை கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல் நிலை கண்டு அதிர்ச்சியடைந்த உடனே அடுத்த நாள் காலையில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பூரண ஆயுள் கிடைக்க வேண்டி, ஆயுள் ஹோம நிகழ்ச்சி சிறப்பாக தமிழக அளவில் நடத்திய பெருமை பெற்றவர் வை.நெடுஞ்செழியன் ஆவார். 
 
கரூர் நகர செயலாளரான இவர் தலைமையில் இன்று கரூர் புனித தெரசாம்மாள் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான அ.தி.மு.க வினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தமிழக முதல்வர் பூரண ஆயுளோடு, என்றும் முதல்வர் பணியில் ஈடுபட்டு மக்களின் துன்பங்களை துயர் துடைக்க வேண்டும் என்று பிரார்த்தனைகளும், விரைவில் அனைத்து வித சவுகரியங்களும் பெற்று வீடு திரும்ப விஷேச திருப்பலி செய்யப்பட்டது.