1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (23:59 IST)

பிக்பாஸ் தேவையற்றது. முதன்முதலில் வாயை திறந்த பொன்.ராதாகிருஷ்ணன்

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பாஜகவின் மற்ற தமிழக தலைவர்கள் கருத்து கூறி வந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுவரை கருத்து தெரிவிக்காமல் இருந்தார்.



 
 
ஆனால் நேற்று கமல்ஹாசன் வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கு நிறைய வேற்றுமைகள் உண்டு என்றும் குறிப்பாக தென்னிந்தியாவில் சுயமரியாதை சற்று அதிகம் என்றும் கூறியது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது.
 
நேற்றைய நிகழ்ச்சி ஏற்படுத்திய பரபரப்புக்கு பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து கருத்து கூறியபோது, 'பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்ப்பது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களின் கலாச்சாரத்திற்கும் நல்லது என்று கூறியுள்ளார். கமல்ஹாசனின் கடுமை மத்திய அமைச்சரை மட்டுமின்றி விஜய் டிவியையும் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது.