போக்குவரத்து விதிமீறல் – போலிஸாருக்கு இரட்டிப்பு அபராதம் !

Last Modified வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (10:24 IST)
தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலிஸாருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்கு வரத்து காவல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் வாகன விபத்துகளில் அதிகமாக நடப்பது இரு சக்கர வாகனங்களால்தான் என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பு அல்லது படுகாயம் அடைவதற்கு முக்கியக் காரணமாக இருப்பது ஹெல்மெட் அணியாமல் இருப்பதுதான். அதனால் இருசக்கரவாகனங்களில் பயணம் செய்யும்போது ஓட்டுபவர் மட்டும் இல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதை நடைமுறைப்படுத்த காவல்துறையும் கடுமையாகப் போராடி வருகிறது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் மக்க ளவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன் படி ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்களுக்கு ரூ 100க்குப் பதில் ரூ 500 ஆகவும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ.2 ஆயிரம் அபராதத்துக்குப் பதில் ரூ.10 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீஸா ருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக் கப்படும் என சென்னை போக்கு வரத்து காவல் கூடுதல் ஆணையர் ஏ.அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :