1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2017 (10:46 IST)

ராகவா லாரன்ஸை தடுத்தி நிறுத்திய போலீஸ்; உள்ளே விட மறுப்பு: மெரினாவில் பதற்றம் (வீடியோ இணைப்பு)

ராகவா லாரன்ஸை தடுத்தி நிறுத்திய போலீஸ்; உள்ளே விட மறுப்பு: மெரினாவில் பதற்றம் (வீடியோ இணைப்பு)

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என தமிழகம் முழுவதும் அறவழியில் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இன்று தமிழகம் முழுவதும் நடந்து வந்த போராட்டத்தை காவல்துறை அடிதடி நடத்தியும் சில இடங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைத்து வருகின்றனர்.


 
 
சென்னை மெரினாவில் நடந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் கலந்து கொண்டு பல்வேறு உதவிகளை போராட்டக்காரர்களுக்கு செய்து வந்தார். இவர் கலந்து கொண்ட இந்த போராட்டக்குழு தான் மெரினாவில் உள்ள போராட்டக்குழுக்களின் மையப்புள்ளி.
 
இந்நிலையில் கழுத்து வலி மற்றும் உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக அவதிப்பட்டு வருகிறார் லாரன்ஸ். இதனையடுத்து நடுவில் ஒருமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் மெரினா போராட்ட களத்திற்கு வந்தார்.
 
இதனையடுத்து நேற்று மறுபடியும் உடல் நிலை சரியில்லாததால், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை முதல் போராட்டத்தில் இருந்த மாணவர்களையும், இளைஞர்களையும் வெளியேற்ற பெரிய அளவில் போலீசார் குவிக்கப்பட்டு அடிதடியாக போராட்டத்தை கலைத்து வருகின்றது அரசு.

 

 
 
இதனை தொலைக்காட்சியில் பார்த்த ராகவா லாரன்ஸ் உடனடியாக மெரினா போராட்டக்களத்தை நோக்கி வந்தார். ஆனால் அவரை மெரினா செல்லும் ரோட்டுக்குள்ளேயே மடக்கியது காவல்துறை. மெரினா கடற்கரை செல்ல அனுமதிக்காத போலீசாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவரை போலீசார் விடவில்லை.