பழைய 50 பைசா நாணயத்திற்கு பலூடா ஐஸ்கிரீம்: கடையை இழுத்து மூடிய போலீசார்!
பழைய ஐம்பது பைசா நாணயத்திற்கு பலூடா ஐஸ்கிரீம் என்று அறிவிப்பு வெளியிட்ட கடையை போலீசார் இழுத்து மூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூர் பகுதியில் உள்ள தேர் வீதி மாரியம்மன் கோவில் அருகே பலூடா ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பழைய ஐம்பது பைசா நாணையத்தை கொண்டு வருபவர்களுக்கு 100 ரூபாய் மதிப்புள்ள ஐஸ்கிரீம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து ஏராளமான ஒரு பழைய 50 காசுகளை கொண்டு வந்து ஐஸ்கிரீம் வாங்க குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பலூடா ஐஸ் கிரீமை வாங்க வேண்டும் என்று முண்டியடித்ததால் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக கடையை இழுத்து மூடினர். இதனால் அந்த பகுதியில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.
Edited by Siva