யூடியூபர் டிடிஎஃப் வாசனின் காரை பறிமுதல் செய்த போலீஸார்!

திங்கள், 2 ஜனவரி 2023 (16:54 IST)
டிடிஎஃப் வாசன் இன்று சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்றதால் அவரது காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

யூடியூபர் டிடிஎஃப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து இவர் மீது சூலூர்,கடலூர் உள்ளிட்ட  காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வரும் டிடிஎஃப் வாசன் இன்று சென்னையில் நம்பர் பிளேட் இல்லாத காரில் சென்றதால் அவரது காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை வடபழனியில் உள்ள  கமலா தியேட்டருக்கு படம் பார்க்க வந்த டிடிஎஃப் வாசனின் காரில் நம்பர் பிளேட் இல்லாததால் அவருக்கு அபராதம் விதித்துள்ளனர் போக்குவரத்து போலீஸார்.

ALSO READ: நியூஸ் சேனல்களை எச்சரித்த யூடியூபர் டிடிஎஃப் வாசன்
 

மேலும், உரிய ஆவணங்கள் சமர்பித்து, காரை எடுத்துச் செல்லும்படி அவருக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments