1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 மே 2023 (12:24 IST)

சென்னையில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரையிடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு..!

‘தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து இன்று ‘தி  கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழகம் உள்பட நாடு முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சென்னையில் ‘தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்டுள்ள 15 திரையரங்குகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஒவ்வொரு திரையரங்கிலும் 30 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
இந்த திரைப்படத்திற்கு எதிராக ஒரு சில இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது முட்ட புள்ளி
 
Edited by Mahendran