ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 மே 2019 (12:16 IST)

பாலியல் உறவுக்கு ஆன்லைனில் பணம் கட்டி ஏமாந்த போலீஸார்

பாலியல் உறவுக்காக பெண் புரோக்கர் ஒருவருக்கு ஆன்லைன் மூலம் பணம் கட்டி ஏமாந்த போலீசார், அந்த் பெண் புரோக்கரை மிரட்டியதால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
ஆயுதப்படை காவலர்களான மோகன், சார்லஸ் வேளாங்கண்ணி மற்றும் இவர்களது நண்பர்  ராஜசேகரன் ஆகிய மூவரும் பாலியல் உறவுக்கு பெண் கேட்டு பெண் புரோக்கர் ஒருவருக்கு ஆன்லைன் மூலம் பணம் கட்டியுள்ளனர். ஆனால் அந்த பெண் புரோக்கர் பணத்தை பெற்றுவிட்டு பாலியல் உறவுக்கு பெண்ணை அனுப்பவில்லை. செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.
 
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த போலீசார் உள்பட மூவரும் அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து அவரிடம் சண்டைபோட்டு அவரிடம் இருந்த நகைகளை பறித்து கொண்டுள்ளனர்.
 
இந்த நிலையில் நேற்றிரவு மூவரையும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் பார்த்த அந்த பெண், நகைகளை மீண்டும் தன்னிடம் கொடுத்துவிடுமாறு கூறி பிரச்சனை செய்தார். இந்த வாக்குவாதம் பெரிதாக மாறியதை அடுத்து சிலர் போலீசுக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், பெண்ணிடம் நகைகளை பறித்த போலீசார் உள்பட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  காவல்துறையில் இருந்து கொண்டே பாலியல் உறவுக்கு பணம் கட்டியதும், பெண்ணிடம் நகை பறித்ததுமான செயல்களை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது