போலீசார் தாக்கியதில் ஓட்டுனர் காயம் : கரூரில் பரபரப்பு
கரூர் பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி விடுவததில் ஏற்பட்ட பிரச்சினையில் ஓட்டுநரை பேருந்தில் பயணம் செய்த காவலர் தாக்கியதால் ஓட்டுநர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையிலிருந்து அரசு பேருந்து இன்று திருச்சி வந்து கொண்டிருந்த போது, அந்த பேருந்தை கோவை மாவட்டம் உப்பிப்பாளையத்தை சார்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 50) ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் கோவையை அடுத்த கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் காவலர் இலங்கேஸ்வரன் குடும்பத்துடன் பேருந்தில் ஏறி கரூருக்கு வந்துள்ளார்.
பேருந்து கரூர் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து அதன் இருப்பிடத்திற்குள் நிறுத்துவதற்குள் காவலரும் அவரது குடும்பத்தினரும் இறங்க முயற்சித்த போது காவலர் மட்டும் இறங்கி உள்ளார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறங்குவதற்குள் பேருந்து பின்புறம் உள்ள பேருந்து இருப்பிடத்தை நோக்கி பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளார்.
தனது மனைவி முன் பந்தா காண்பிப்பதற்காக ஓட்டுநரை தரைக்குறைவாக பேசிய காவலருக்கும், ஒட்டுநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்பு ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரை காவலர் தாக்கியதில் மூக்குப் பகுதியில் தாக்கி காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் அவரது மூக்கு கண்ணாடி உடைந்ததோடு, அவருக்கு மூன்று தையல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொகுதி என்பதாலும், பாதிக்கபட்டது. அவரது துறையை சார்ந்த போக்குவரத்து ஊழியர் என்பதாலும், அடி கொடுத்தது காவலர் என்பதால் அந்த விஷயத்தை மூடி மறைத்ததோடு, கரூர் காவல் நிலையத்தில் போலீசார் இரு தரப்பினரிடையேயும் சமரசம் செய்து வைத்தனர்.
இதனையடுத்து பேருந்தை காவல் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர்.
நேற்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னையில் இருந்து திருச்சி வழியாக விமானம் வழியாக திருச்சி வந்ததையடுத்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து முற்றிலும் எரிந்து நாசமானது இன்று அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 50 வயது ஒட்டுநர் தாக்கப்பட்டுள்ளார். அமைச்சர் தொகுதி என்பதால், இவை அனைத்தும் மூடி மறைக்கப்படுகிறதா என்று பல்வேறு கோணங்களில் மற்ற தொழிற்சங்கத்தில் செய்தி பரவி வருகின்றது.
இந்த சம்பவம் இப்பகுதியில் மட்டுமில்லாமல் போக்குவரத்து துறை வட்டாரத்திலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சி.ஆனந்தகுமார் - செய்தியாளர்