1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2017 (16:58 IST)

மெரினாவில் காவல்துறை குவிப்பு? - போராட்டத்தை தடுக்க முயற்சியா?

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கான காவல் துறையினர் களம் இறங்கியுள்ளதால், போராட்டத்தை தடுக்க முயல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தக் கோரி தமிழகத்தின் பல்வேறு தரப்பிலும் இருந்து ஆதரவு குவிந்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று உலக அளவில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக மெரீனாவிலும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் மெரீனா கடற்கரைப் பகுதியில் இன்று திடீரென 2000 போலீசாருக்கும் மேலாக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை முடக்கி கூட்டத்தை கலைக்க போலீசார் குவிக்கப்பட்டதாக தகவல் பரவியது.

ஆனால், நாளை தமிழக சட்டசபைக் கூட்டம் தொடங்க இருப்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே இந்த காவல்துறை குவிப்பு என்றும் கூறப்படுகிறது.