1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 27 ஜூலை 2022 (14:13 IST)

வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான திட்டத்தை வரவேற்கிறேன்: பாமக ராமதாஸ்

ramadoss
வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான திட்டத்தை வரவேற்கிறேன் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பாமக ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 
 
தமிழ்நாட்டில் 1545 தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அறிவுப்பசி தேடி அரசு பள்ளிகளுக்கு  வரும் ஏழைக் குடும்ப மாணவர்களின் வயிற்றுப் பசியை தீர்ப்பதற்கான இந்த திட்டம் வரவேற்கத்தக்கது ஆகும்!
 
அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவும் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் தவறாமல் இடம் பெற்ற இந்த அறிவிப்பு நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!
 
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறைந்த அளவிலான பள்ளிகளில் தான் தொடங்கப்படுகிறது. இது அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைத்து மாணவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். காலை உணவுடன் பாலும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்!