மாநில கட்சி அங்கீகாரத்தை இழந்தது பாமக: இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி..!
புதுச்சேரியில் மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பாட்டாளி மக்கள் கட்சி இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேர்தலில் பாமக குறிப்பிட்ட சதவீத வாக்குகள் மற்றும் வெற்றிகள் பெறாத காரணத்தால் அக்கட்சியின் மாநில அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி யூனியனில் பாமக அங்கீகரிக்கப்பட்ட ஒரு மாநில கட்சியாக இருந்ததால் அக்கட்சியின் மாம்பழம் சின்னம் அங்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் சட்டப்பேரவை தேர்தலில் குறைந்தபட்சம் 2 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 2009 ஆம் ஆண்டு பாமக புதுச்சேரி மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிறகு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாமக வெற்றி பெறவில்லை.அது மட்டும் இன்றி மூன்று சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளை தான் பெற்றது.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாமக போட்டியிடவில்லை என்பதை அடுத்து அக்கட்சியின் மாநில அந்தஸ்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழகத்தில் மாநில அந்தஸ்தை பாமக பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edted by Mahendran