செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 28 நவம்பர் 2022 (13:16 IST)

பா.ம.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை: அன்புமணி ராமதாஸ்

anbumani
பாட்டாளி மக்கள் கட்சியை கடந்த இரண்டு தேர்தல்களில் அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது எந்த கூட்டணியிலும் பாமக இல்லை என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.
 
மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் பாமக தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை என்றும் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட பாமக தனித்துப் போட்டியிட்டது என்றும் தெரிவித்தார் 
 
இதனை அடுத்து பாமக 2024 ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் திமுக கூட்டணியில் பாமக இணைய பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
 
Edited by Siva