திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (22:18 IST)

தமிழக அரசின் நீட் அவசர சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

இந்த ஆண்டு மெடிக்கல் கல்லூரியில் சேர காத்திருக்கும் மாணவர்களுக்கு நீட் உண்டா? இல்லையா? என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை. இந்த வருடம் மட்டுமாவது விலக்கு அளித்தால் நல்லது என்று நீட்-ஐ விரும்பாத மாணவர்களும், நீட் இருந்தால் தான் தங்களுக்கு மெடிக்கல் சீட் கிடைக்கும் என்று நினைக்கும் மாணவர்களும் உள்ளனர். ஆனால் முடிவு யார் பக்கம் என்பது மதில்மேல் பூனையாக இருந்தது.



 
 
இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது என்று ஔறுதியுடன் கூறினாலும், இந்த ஒரு ஆண்டு மட்டும் தமிழக மாணவர்களுக்கு விலக்கு தர, தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
 
உடனே விழித்துக்கொண்ட தமிழக அரசு சமீபத்தில் நீட் விலக்கு வேண்டி அவசர சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டத்தில் சில திருத்தங்கள் செய்த மத்திய அரசின் சட்ட அமைச்சகம் சற்று முன்னர் ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நீட் இல்லை என்பது பெரும்பாலான தமிழக மாணவர்களுக்கு கிடைத்துள்ள இனிப்பான செய்தி ஆகும்