வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (09:08 IST)

பிளஸ் 2 ஒரிஜினல் மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம்: தேர்வுத்துறை இயக்ககம் அறிவிப்பு..!

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் கல்லூரியில் சேர்வதற்காக அளிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று முதல் ஒரிஜினல் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 
 
மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளியில் ஒரிஜினல் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும்  அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்வு துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
 
கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை எழுதிய மாணவா்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்று (ஜூலை 31-ம் தேதி) முதல் வழங்கப்படவுள்ளன. 
 
மாணவா்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வாயிலாகவும், தனித் தோ்வா்கள் தாங்கள் தோ்வெழுதிய மையங்கள் வாயிலாகவும் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். 
 
மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளில் மாற்றம் இருந்த மாணவா்களுக்கு திருத்தப்பட்ட அசல் சான்றிதழ்கள் வழங்கப்படும்’ இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva