திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 5 ஜூலை 2021 (07:10 IST)

ரூ.101ஐ தாண்டியும் உயரும் பெட்ரோல் விலை: இன்றைய சென்னை விலை என்ன?

ரூ.101ஐ தாண்டியும் உயரும் பெட்ரோல் விலை: இன்றைய சென்னை விலை என்ன?
கடந்த சில மாதங்களாக குறிப்பாக ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது 
 
சமீபத்தில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 100 ரூபாயை கடந்தது என்பதை பார்த்து வந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்ந்து வருவதால் 101 ரூபாயை பெட்ரோல் விலை நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 31 காசுகள் உயர்ந்து உள்ளது. இதனை அடுத்து சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 100.75 ரூபாய் என்ற நிலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இன்றைய டீசல் விலை உயர்த்தப்படவில்லை என்பதால் நேற்றைய விலையான 93.91 ரூபாய் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்து வருவதால் மத்திய மாநில அரசுகள் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.