1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 9 மே 2017 (15:27 IST)

ஞாயிறு விடுமுறை திட்டத்தை ரத்து செய்த பெட்ரோல் பங்குகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மே 14ஆம் தேதி முதல் ஞாயிறுதோறும் பெட்ரோல் பங்குகள் விடுமுறை என அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.


 

 
கடந்த மாதம் 18ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெட்ரோல் நிலையங்களுக்கு விடுமுறை நாளாக இருக்கும் என பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் கூட்டமைப்பு சங்கம் அறிவித்தது.
 
இதையடுத்து பெட்ரோல் நிலையங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமை விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இதை தமிழக பெட்ரோல் மற்றும் டீசல் விறபனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.