புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 ஜூலை 2020 (16:36 IST)

அதிமுக vs திமுக: குடும்ப தகறாறில் பெட்ரோல் குண்டு வீச்சு!

மதுரையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மதுரை கீரைத்துறை பகுதியில் மதுரை மாநகராட்சி முன்னாள் திமுக மண்டல தலைவரான வி.கே.குருசாமி வசித்து வருகிறார். இவர் கொலை மற்றும் ஆயுதங்களை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் இவரது சகோதரியின் கணவர் முத்துராமலிங்கம் நேற்றைய முன்தினம் உயிரிழந்த நிலையில் அவரது சகோதரி மற்றும் மகன் இருவரும் சிறையிலிருந்து பரோலில் வந்துள்ளனர். 
 
இதனால் குருசாமி வீட்டு அருகே உள்ள சகோதரியின் வீட்டிற்கு 10க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் குருசாமி உறவினர் இறப்பிற்கு வந்து தனது வீட்டில் இருப்பார் என நினைத்து அவருடைய எதிர்தரப்பை சேர்ந்த சிலர் வீட்டில் குண்டை வீசி சென்றதோடு வீட்டின் முன்பு நிறுத்திவைத்திருந்த வாகனங்களையும் அடித்து நொறுக்கி சென்றுள்ளனர். 
 
காவல்துறையினர் பக்கத்து தெருவில் பாதுகாப்பு பணியில் இருந்தபோது நடைபெற்ற இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் திமுக நிர்வாகி வி.கே.குருசாமி குடும்பத்தினருக்கும், முன்னாள் அதிமுக நிர்வாகி ராஜபாண்டியன் என்பவரின் குடும்பத்தினருக்கும் உள்ள முன்விரோதம் காரணமாக 6 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து தொடரும் கொலை முயற்சி சம்பவங்கள் அப்பகுதி பொதுமக்களிடையை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.