வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 12 மே 2021 (07:15 IST)

மீண்டும் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை: இன்றைய விலை என்ன?

5 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில வாரங்களாக பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது ஐந்து மாநிலங்களிலும் புதிய ஆட்சி ஏற்பட்டதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வருகிறது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் விலை ஏறி கொண்டே இருந்தது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வேலையின்றி வருமானம் இன்றி இருக்கும் நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் சிக்கலில் உள்ளனர். இன்று சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து பார்ப்போம்
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 22 காசுகளும் டீசல் விலை 24 காசுகள் உயர்ந்து உள்ளது. சென்னையில் இன்றைய ஒரு லிட்டர் பெட்ரோல் விலை: ரூ.93.84  நேற்றைய விலையை விட 22 காசுகள் அதிகம் என்பதும், சென்னையில் இன்றைய ஒரு லிட்டர் டீசல் விலை: ரூ.87.49   நேற்றைய விலையை விட 24 காசுகள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.