1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 டிசம்பர் 2022 (08:05 IST)

222 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை.. எப்போது குறையும்?

petrol
கடந்த 222 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாறாத நிலையில் எப்போதுதான் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் உள்ளன. 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது 
 
பெட்ரோல் டீசல் விலை கடந்த 7 மாதங்களாக மாறாமல் இருக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன 
 
ஆனால் மத்திய அரசு பிடிவாதமாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்காமல் இருப்பது பொது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் விரைவில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
Edited by Siva