1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதையும் ஒரே விலையில் தான் விற்பனையாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றும் நேற்றைய விலையிலேயே விற்பனை ஆகும் என்றும் எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
உத்தரப் பிரதேசம் கோவா பஞ்சாப் உள்பட ஒருசில மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் சட்டமன்ற தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் கூறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது