1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 டிசம்பர் 2021 (07:33 IST)

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

சென்னையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதை பார்த்து வருகிறோம். 
 
சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து இருந்தாலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நாற்பத்தி இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
கோவா மேற்கு வங்காளம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ளதால் இன்னும் சில மாதங்களுக்கு பெட்ரோல் விலையில் மாற்றம் இருக்காது என்றும் தகவல் வெளிவந்துள்ளது பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.