செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (11:31 IST)

திட்டித் தீர்த்த சென்னை மக்கள் - தப்பித்து ஓடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் (வீடியோ)

நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, கூவத்தூரிலிருந்து புறப்பட்ட எம்.எல்.ஏக்களை பொதுமக்கள் ஏகத்துக்கும் திட்டித் தீர்த்து அவர்களை ஓட விட்டனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கியதால், அவர் பக்கம் எம்.எல்.ஏக்கள் சென்று விடக்கூடாது என, கூவத்தூர் விடுதியில் அவர்களை சசிகலா தரப்பு அடைத்து வைத்தனர். அங்கிருந்து அவர்கள் வெளியேறவும், சுதந்திரமாக முடிவெடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் கொடுத்தனர்.
 
சசிகலாவை எதிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்-ற்கு இவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், எம்.எல்.ஏக்களின் செயல்பாடு பொதுமக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், இதன் காரணமாக, ஓ.பி.எஸ் பல எம்.எல்.ஏக்களை தன் பக்கம் இழுக்க முடியவில்லை. எனவே, அவர் முதலமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போனது. எனவே, அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது.
 
இந்நிலையில், நேற்று எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். அவருக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு பதவிப்பிரமாணமும் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக, அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் விடுதியிலிருந்து வெளியே வந்தனர். அப்போது, அவர்களை பார்த்த அந்த பகுதி மக்கள் அவர்களை ஏகத்திற்கும் திட்டித் தீர்த்தனர். கார் கண்ணாடி மீது காறி உமிழ்ந்தனர். சில இடத்தில் சிக்னல் காரணமாக எம்.எல்.ஏக்களின் கார் நின்றது. எனவே, பொதுமக்களிடம் இருந்து தப்பிக்க, எம்.எல்.ஏக்கள் காரிலிருந்து இறங்கி அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
 
ஓட்டுப் போட்ட மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளாமல், பணத்திற்காகவும், பதவிக்காகவும் இவர்கள் விலை போய்விட்டதாக பொதுமக்கள் திட்டித் தீர்த்தனர். மேலும், எந்த தொகுதி பக்கமும் இவர்கள் நுழைய முடியாது என அங்கிருந்த மக்கள் கருத்து தெரிவித்தனர்.