1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Penalty to stores which is not having tamil board

தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்: கடைகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை..!

assembly
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

 தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் பெயர் ஆங்கிலத்தில் இருக்கும் நிலையில் பெயர் பலகையில் தமிழ் பயன்படுத்துவதை கட்டாயமாக வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நல ஆணையர் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் இதை பல கடைகள் பின்பற்றவில்லை என்பதை எடுத்து தமிழில் பெயர் பலகை இல்லையென்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே ஒருவர் மனு தாக்கல் செய்த நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு முன்பு ஐம்பது ரூபாய் அபராதம் என்று இருந்த நிலையில் தற்போது 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
அடிக்கடி பழுதான மின்சார பைக்.. ஓலா ஷோரூம் முன் இறுதிச்சடங்கு நடத்திய வாடிக்கையாளர்..!