செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 ஜனவரி 2022 (13:17 IST)

முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.500 ஆக அதிகரிப்பு - அரசாணை வெளீயீடு

கடந்த  ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பரவியது. தற்போது இதன் மூன்றாவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவிய ஒமிக்ரான்  தொற்று, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நேற்று 20 ஆயிரத்தைக் கடந்துள்ளது.  இ ந் நிலையில் இத்தொற்றைக் குறைக்க அரசு கொரொனா கட்டுப்பாடுகள் விதித்து, இரவு  நேர ஊரடங்கு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,  பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.200 ல் இருந்து, ரூ.500 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.