திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (07:41 IST)

சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கிய பார்வேந்தர் எம்பி!

சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வழங்கிய பார்வேந்தர் எம்பி!
பெரம்பலூர் தொகுதி எம்பியும் கல்வியாளருமான பாரிவேந்தர், தனது சொந்த செலவில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆம்புலன்ஸ் மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியுள்ளார். இந்த ஆம்புலன்ஸை அவர் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் எனப்து குறிப்பிடத்தடக்கது.
 
கொரோனா முதல் அலையின்போது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு பாரிவேந்தர் எம்.பி ஏற்கனவே 60 டன் அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கியுள்ள நிலையில் தற்போதைய இரண்டாம் அலையிலும் அவர் 60 படுக்கை வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.
 
இந்த நிலையில் இன்று அவர் தனது சொந்த செலவில் 17 லட்ச ரூபாய் மதிப்பிலான நவீன ஆம்புலன்ஸ் வாகனத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட ப்ரியாவிடம் வழங்கியுள்ளார். மேலும் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளையும் இலவசமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.