ஓ.பி.எஸ். மீடியாவுக்குதான் முதலமைச்சர்: மீண்டும் கிளம்பிய சுப்ரமணியன் சுவாமி


Abimukatheesh| Last Updated: புதன், 15 பிப்ரவரி 2017 (18:56 IST)
ஓ.பி.எஸ். மீடியாவின் முதல்வர் வேட்பாளர். அவரிடம் போதுமான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இல்லை என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

 

 
பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி முதன்முறையாக நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தார். நேற்று அந்த வழக்கில் தீர்ப்பு வந்ததையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில், '20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் வென்றுள்ளேன்.  விரைவில் நிறைய பேர் சிறைக்குச் செல்வார்கள்' என்று பதிவிட்டார்.
 
சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த சுப்ரமணியன் சுவாமி நேற்று அந்தர் பல்டி அடித்து, தான் வெற்றிப் பெற்றதாக கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் பேட்டியளித்த சுப்ரமணியன் சுவாமி கூறியதாவது:-
 
ஆளுநர் இப்போது ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கவேண்டும். சசிகலா பெங்களூருக்கு செல்கிறார். ஆனால் அவர் இப்போதும் கட்சியின் தலைவர்தான். ஓ.பி.எஸ். மீடியாவின் முதல்வர் வேட்பாளர். அவரிடம் போதுமான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இல்லை, என்று கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :