1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 9 ஜூன் 2021 (09:01 IST)

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு; மார்தட்டிய மத்திய அமைச்சரை காணல? – ப.சிதம்பரம் விமர்சனம்!

இந்தியா முழுவதும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் மத்திய சுகாதார அமைச்சரை காணவில்லை என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பல மாநிலங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளது. தமிழகத்தில் நேற்று மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடுப்பூசி இல்லாததால் தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில் மத்திய அரசை விமர்சித்துள்ள ப.சிதம்பரம் ” தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை; தடுப்பூசி பற்றாக்குறையே கிடையாது என்று நாள் தோறும் மார்தட்டிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சில நாட்களாகக் காணவில்லை என்பதைக் கவனித்தீர்களா?” என விமர்சித்துள்ளார்.