அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...
விஜய்க்கு மேனேஜராகவும் அவரின் பல படங்களுக்கு பி.ஆர்.ஓ-வாகவும் வேலை செய்தவர் பிடி செல்வகுமார். விஜயை வைத்து புலி என்கிற படத்தை தயாரித்ததும் இவர்தான். பல வருடங்களாகவே விஜயுடன் பயணித்தவர். திடீரென திமுக கட்சியில் இணைந்திருக்கிறார். அதன்பின் வேட்டியாளரிடம் அவர் பேசியதாவது:
விஜய் நன்றாக செயல்படுவார் என்று நம்பிதான் அவரோடு பயணித்தேன். விஜய் மக்கள் இயக்கத்தில் முக்கிய பணியாற்றினேன். ஆனால் இப்போது யார் யாரோ வருகிறார்கள்.. அவரின் அப்பா எஸ்.ஏ சந்திரசேகருக்கு அங்கே மரியாதை இல்லை. அப்படி இருக்கும்போது என்னை எப்படி அவர் சேர்த்துக் கொள்வார்?..
விஜய் ஒரு நிலவு போன்றவர். ஒருநாள் காணாமல் போய்விடுவார். திமுக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதில் பணியாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்திருக்கிறது. எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் அவரை சுற்றி நல்லவர்கள் இருக்க வேண்டும். ஆனால் விஜய்க்கு அப்படி இல்லை.
தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்கள்.. தனக்கு போஸ்டர் ஒட்டியவர்கள் ஆகியோருக்குதான் முன்னுரிமை என்று விஜய் சொன்னார். ஆனால் தற்போதுள்ள புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், வெங்கட்ராமன், ஆதவ் அர்ஜுனே, செங்கோட்டையன், நாஞ்சில் சம்பத் ஆகியோருக்கு பெரிய பதவிகளை கொடுத்துள்ளனர். இவர்கள் எல்லாம் விஜய்க்கு போஸ்டரா ஒட்டினார்கள்?..
ஆரம்ப காலத்திலிருந்து விஜயின் வளர்ச்சிக்காக உழைத்தவர்கள் யாரும் இப்போது அவருடன் இல்லை. விஜய்க்காக 9 பத்திரிகைகளை நடத்தினேன். அவரது போட்டோவை எடுத்துக்கொண்டு பல அலுவலகத்திற்கு ஏறி இறங்கி இருக்கிறேன். 27 வருடங்கள் கடமையாக உழைத்திருக்கிறேன். ஆனால் எனக்கு அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்கிற மன வேதனை எனக்கு இருக்கிறது என்று ஃபீல் செய்து பேசியிருக்கிறார்.