வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (13:49 IST)

வெளியில அடிச்சுக்கிட்டாலும் உள்ளுக்குள்ள ஒட்டிக்கிட்ட ஓபிஎஸ் அணி: சட்டசபையில் ஆதரவு!

வெளியில அடிச்சுக்கிட்டாலும் உள்ளுக்குள்ள ஒட்டிக்கிட்ட ஓபிஎஸ் அணி: சட்டசபையில் ஆதரவு!

அதிமுக எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்திருந்தாலும் சட்டசபை மானியக் கோரிக்கையின்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஓபிஎஸ் அணியினர் ஆதரவாக வாக்களித்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.


 
 
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடக்கும் தமிழக அரசை பல்வேறு கட்டங்களில் விமர்சித்திருக்கிறார்கள். செயல்படாது அரசு என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.
 
இந்த சூழலில் நேற்று சட்டசபை கூடியது. அப்போது கூவத்தூர் பேரம் தொடர்பான சரவணனின் வீடியோ சட்டசபையில் அமளியை ஏற்படுத்தினாலும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.
 
இதனை தொடர்ந்து மானியக் கோரிக்கை மீதான குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் ஓபிஎஸ் அணியினர் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தனர். ஆனால் ஓபிஎஸ் அணியினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஆதரவு அளித்ததை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
 
அதிமுகவில் அணிகள் உருவாகி கட்சி பிளவுபட்டு இரு அணிகளும் வெளியில் மோதிக்கொண்டு நின்றாலும், சட்டசபையில் ஆதரவு அளித்தது அதிசயமாக பார்க்கப்படுகிறது.