1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 6 மார்ச் 2017 (08:57 IST)

ஜெ.வை கீழே தள்ளிவிட்டதை பார்த்த வேலைக்கார பெண் காணவில்லை - ஓ.பி.எஸ் அணி பகீர் தகவல்

போயஸ் கார்டன் வீட்டில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதை நேரில் பார்த்த பணிப்பெண்ணை காணவில்லை என ஓ.பி.எஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.


 

 
சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கிய ஓ.பி.எஸ் அணி, ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை, சி.பி.ஐ விசாரணை என அனைத்து விசாரணைகளும் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், மரணம் அடைந்த வரை எழுந்த ஏராளமான சந்தேகங்களையும், கேள்விகளையும் ஓ.பி.எஸ் அணியினர் சமீபத்தில் செய்தியாளர்கள் முன் வைத்தனர்
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் நேற்று இரவு முழுவதும், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனது விட்டில் ஆலோசனை நடத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.
 
அதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பொன்னையன் “ ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதை நேரில் பார்த்த வேலைக்காரப் பெண் காணவில்லை. அவர் தற்போது எங்கே இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவரை கண்டுபிடித்தால் பல உண்மைகள் வெளிவரும்” என தெரிவித்துள்ளார்.