1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2017 (15:35 IST)

அம்மா டி.வி - ஓ.பி.எஸ் தொடங்கும் புதிய தொலைக்காட்சி?

முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்றை துவங்கயிருப்பதாக செய்திகள் வெளியானது.


 

 
தமிழகத்தை பொறுத்த வரை பெரும்பாலான அரசியல் கட்சிகள் தங்களுக்கென பிரத்யோக தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகின்றனர். திமுக, அதிமுக, தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளுக்கு என ஏற்கனவே தொலைக்காட்சி சேனல்கள் இருக்கிறது.
 
இந்நிலையில் சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கியுள்ள ஓ.பி.எஸ், ஒரு தொலைக்காட்சி சேனல் ஒன்றை துவங்க முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. அதன் மூலம், சசிகலா மற்றும் தினகரன் தரப்பினருக்கு எதிரான கருத்துகளை மக்கள் மத்தியில் அவர்கள் பரப்ப முடிவு செய்திருப்பதாகவும் தெரிகிறது.
 
அதற்காக ஒளிபரப்பப்படாமல் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலை விலைக்கு வாங்கி அதற்கு  ‘அம்மா டிவி’ என பெயர் வைக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
 
இதில், ஜெயா தொலைக்காட்சியில் பணி புரிந்த முன்னாள் பத்திரிக்கையாளர் ஒருவருக்கு தலைமை பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓபிஎஸ் அணியில் உள்ள மாஃபா பாண்டியராஜன் இதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருப்பதாகவும், அநேகமாக வருகிற ஏப்ரல் 14ம் தேதி இந்த சேனல் பற்றி அறிவிப்பு வெளியாகும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.